இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி: மிகுவல் ஒலிவேரா சம்பியன்!

இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான, மிகுவல் ஒலிவேரா முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்;கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் இரண்டாவது சுற்றான இந்தோனேஷியன் மோட்டோ ஜிபி பந்தயம், மண்டலிகா சர்வதேச ஒடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 116.4 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், கே.டி.எம் அணியின் வீரரான மிகுவல் ஒலிவேரா, பந்தய தூரத்தை 33 நிமிடங்கள், 27.223 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, 2.205 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 3.158 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி ஒரு வெற்றியுடன் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கே.டி.எம் அணியின் பிராட் பைண்டர் 28 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மூன்றாவது சுற்றான அர்ஜெண்டீனா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி டெர்மாஸ் டி ரியோ ஹோண்டோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *