
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 199 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ஆயிரத்து 680 ரூபாவாகவும் 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதிக்கு அமைவாக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையே குறித்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும்.