நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில் அவரின் அந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பிரதமர் அலுவலக பிரதானி யோசித்த ராஜபக்சவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் விசேட கோரிக்கையினையடுத்தே கப்ரால் தனது அமைச்சுப்பொறுப்பை இராஜினாமா செய்யவுள்ளார்.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றி வருபவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கப்ரால் தற்போதைய பதவியிலிருந்து விலகுவதாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் பெசிலின் வருகைக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்த ஜெயந்த கெட்டகொடவுக்கு இந்த பதவியை வழங்கவும் ஒருதரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது