சிலாபம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைந்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் உயர் பொலிஸ் அதிகாரி லலித் ரோஹன கமகே அவர்களிடம் கிடைகபெற்ற புகாரின் அடிப்படையில் , குறித்த அதிகாரியின் தவறான நடத்தை குறித்து சிலாபம் காவல் நிலையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
குறித்த பொலிஸ் அதிகாரி, சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மீனவர் இரவு சென்ற பின்னர் இரவுவேளையில் அவரது மனைவியை சந்திக்க சென்ற நிலையில், பெண்ணின் வீட்டில் வைத்து பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளார்.
பிரதேசவாசிகளால் குறித்த அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட துணை பொலிஸ் அதிகாரி திருமணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.