மாதம்பே – பனிரெந்தாவ வனப்பகுதியில் ஒருவர் வைத்திருந்த வலையில் இன்று காலை மான் ஒன்று சிக்கியதை அவதானித்த அப்பகுதி மக்கள் மாதம்பை பொலிஸ் மற்றும் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் ஆகியோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகள் விரந்து சென்று வலையில் சிக்கிய மானை பொது மக்களின் உதவியுடன் உயிருடன் மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் நிக்காவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு சிகிச்சையளிப்பதற்காகக் கொண்டு சென்றுள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி பண்டார தெரிவித்தார்.
குறித்த மானின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்ததுடன் குறித்த மான் 12 வயதுடையதாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.