கொரோனா தொற்றினால் உயிரிழந்த யாழ் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசுக்கு வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அவர் தொடர்பான நினைவுரையினை வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் நிகழ்த்தியிருந்தார்.
