
ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் புதிய அரசுக்கு முல்லா முகமது ஹசன் அகுந்த் கவுன்சில் அமைச்சர்களின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதித் தலைவராக முல்லா அப்துல் கானி செயற்படுவார் என தலிபான்களின் ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தாலிபன்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் தான் முல்லா முகமது ஹசன்.
முல்லா முகமது ஹசன் அகுந்த் தான் தற்போது தாலிபன்கள் இயக்கத்தில் உள்ள ரெஹ்பரி ஷுரா என்ற சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளார்.
ரெஹ்பரி ஷுரா (தலைமை கவுன்சில்) குழு தான் அனைத்து விவகாரங்களையும் நடத்தும் அரசாங்க அமைச்சரவை போல செயல்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் புதிய அரசாங்கத்தின் இடைக்கால தலைவராக முல்லா ஹாசனின் பெயரை தாலிபான்கள் இயக்க குழுவின் முன்னணி தலைவராக முல்லா ஹெபத்துல்லா இன்று முன்மொழிந்தார்.