கனகராயன்குள விபத்தில் ஒருவர் படுகாயம்!

வவுனியா – கனகராயன்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காருடன் துவிச்சக்கரவண்டி மோதியுள்ளது. இதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *