
ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் பதிவான நில நடுக்கம் குறித்து விசேட குழுவொன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று (07) முற்பகல் 10.38 மணியளவில் குறித்த பிரதேசத்தில் 2.4 மெக்னிடியூட் அளவில் சிறியளவிலான நில அதிர்வு பதிவானது.
இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனமல்வில உள்ளிட்ட சில பிரதேசங்களில் இதுபோன்று சிறியளவிலான நில அதிர்வொன்று பதிவாகியிருந்தது.
இந்நிலையில் அங்கு பதிவாகிய நில அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மொனராகலை அலுவலக அதிகாரிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.