ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித்கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளதால் என்னை மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.