
மட்டு வுவுணதீவில் கொரோனாவினால் 10 வயது சிறுவனின் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா வைரஸினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, மட்டக்களப்பில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.





