தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில், இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, களனி, வனவாசல பகுதியில் வைத்து குறித்த இளைஞன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, 01 கிலோ 666 கிராம் ஐஸ் ரக போதைப்பொருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.