கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் எலியந்த, தற்போது சற்று ஆபத்தான நிலையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தற்போது கொழும்பிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, அங்கு அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆன்மீக சிகிச்சை முறையில் மிகவும் பிரபல்யமான மருத்துவர் எலியந்த வைட் கொரோனா தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மருத்துவர் எலியந்த வைட், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் மருத்துவர் என்பதோடு, ஆற்றில் பானை வீசினால் கொரோனா குறையும் என கூறிய முதலாவது வைத்தியராகவும் காணப்படுகின்றார்.
இதேவேளை,வைத்தியர் எலியந்த வைட் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை இதுவரையில் பெறவில்லை எனவும் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.