கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை ஆழுகைக்குற்ப்பட்ட கல்லாறு பகுதியில் 230 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கான குடிநீர் குடிநீர் அயல்கிராம் பிரமந்தனாறு பகுதியில் இருந்தே குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருவதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,
எமது பகுதியில் சுத்தமான குடி நீர் இல்லாததால் பிரமந்தனாறு பகுதியிலே இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு, எடுத்து வருகின்றோம்.
அதிலும், தொடர்ச்சியாக உரிய நேரத்திலும் நாளாந்தம் தண்ணீரை பெறமுடியாது உள்ளதுடன், தண்ணீர் மிக கூறைவாக வருகின்றமையும் ஒரு நாள் முழுவதும் தண்ணீருக்காக செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், வாரத்தில் இருதடவைகளே தமக்கு குடிநீர் கிடைக்கப்பெறுகிறது எனவும் தண்ணீரை தினமும் பெறுவதற்கு உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் தாங்கள் குடிநீர் பெருவதில் பெரும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
இப்பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் சில சமயங்களில் வராது விடுவதும் உண்டு.அப்போதே எமது கிணற்றில் உள்ள பயன்படுத்த முடியாத குடிநீரை குடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.
எனவே உரிய அதிகாரிகள் எமது பகுதிக்கு தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
அத்தோடு இப்பகுதிகளில் தண்ணீர் முறையாக வழங்கப்படாத காரணத்தினால் சிலர் தமது இருப்பிடத்தை விட்டு வேருடங்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்