
வத்தளை – வனவாசல வீதிப் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 666 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.