கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக மண் அகலும் நடைபெறுவதாக தமிழ் கூட்டமைப்பு கட்சியின் அமைச்சர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் கிழக்கு மாகாண துணை போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவில் ஒரு தீவினை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் மண் அகலும் நடவடிக்கைகளில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ஆதரவினை வழங்கி வருவதாகவும் கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் மண் அகழ்வு தொடர்பாக அரசாங்கம், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மீதும் தனது தனிப்பட்ட பகையின் காரணமாக இத்தகைய குற்றச்சாட்டை இவர்கள் மீது வைத்துள்ளார் என கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் அனுராத யஹம்பத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறுகின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தான் கடுமையாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தான் விலகுவதாக சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.