முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை மறுதினம் விடுதலை செய்யப்படலாம் என்று தான் நம்புவதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆகும்.
எங்கள் அன்புமிக்கவரும் பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை அன்றைய தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.