613 பொருள் வகைகளுக்கு இறக்குமதிக்கான நிபந்தனைகளை வெளியிடும் போது 100% எல்லை பணவைப்பு தேவையை விதிக்க மத்திய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகளால் பொருட்களின் பற்றாக்குறை அல்லது பொருட்களின் விலை உயர்வு இருக்காதென்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் முந்தைய அரசாங்கத்தின் தவறான அந்நிய செலாவணி மேலாண்மை கொள்கை, ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று போன்ற பல்வேறு விடயங்களின் விளைவாக நாடு மிகப்பெரிய அந்நிய செலாவணி நெருக்கடியை எதிற்கொண்டுள்ளது.
எனினும் இத்தகைய சூழ்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் கடனின் வரம்பை அதிகரிப்பதன் மூலம் கடனைக் கட்டுப்படுத்த அதனை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளது.
மேலும் குளிரூட்டிகள், மின்விசிறிகள், குளிர்சாதனப்பெட்டிகள், உறைவிப்பான் முதலிய 613 பொருட்கள் எதுவும் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கவில்லை. இந்த பொருட்களின் வரி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய பொருட்களின் இறக்குமதி தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளை மாத்திரமே முன்வைத்து அதனூடாக பண எல்லை வைப்பு தேவையை இலங்கை மத்திய வங்கி விதித்துள்ளது. ரூபாய் மதிப்பைக் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
மேலும் எவ்வாறாயினும், அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகின்றது. அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இறக்குமதியாளர்களுக்கு இந்த நிபந்தனையை நிறைவேற்றுவது கடினமதாக இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.