மியாமி பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றில் நிக் கிர்கியோஸ்- ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும், மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நிக் கிர்கியோஸ் மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசும் பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நிக் கிர்கியோஸ், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

——————————————————————————————————————————————————————————–
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஹங்கேரியின் பன்னா உட்வர்டியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *