நுவரெலியாவில் விவசாயிகள் இரசாயன உரங்களை பயன்படுத்த நடவடிக்கை!

இந்த பருவத்தில் காய்கறி உற்பத்தி வெற்றிகரமாக அமையாததால் உற்பத்தி செய்த காய்கறிகளை அறுவடை செய்து அதனை வெட்டி வீசிவிட்டு கம்போஸ்ட் உரம் பயபடுத்த போவதாக நுவரெலியாவில் உள்ள மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பருவத்தில் தாங்கள் லீக்ஸ், முட்டைக்கோஸ், கேரட் மற்றும் கீரை பயிரிட்டுள்ளதாகவும், பயிருக்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவில்லை என்றும், இதனால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளதாகவும், அந்த காய்கறிகளுக்கு சந்தை விலை இல்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

நுவரெலியா உழவர் சேவை மையம் சிறிய அளவில் காய்கறிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்குவதில்லை என்றும், அவர்களின் உற்பத்திக்கு ஒரே நேரத்தில் இராசயன உரத்தை பயன்படுத்த பழகிவிட முடியாது என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

நிலவும் சூழ்நிலை காரணமாக, நுவரெலியாவில் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு சந்தையில் அதிக கேள்வி இல்லாததால், நுவரெலியா காய்கறி விவசாயிகளின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

நுவரெலியாவில் உள்ள காய்கறி விளைவிக்கும் விவசாயிகள் கம்போஸ்ட் உரம் பயன்படுத்த பழகும் வரை தங்களுக்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *