அதிக விலைக்கு விற்கும் நோக்குடன் இந்த நேரத்தில் பொருட்களை மறைத்து பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள் சுனாமி பேரழிவின் போது அடித்து செல்லப்பட்ட குழந்தையின் தங்க சங்கிலியை அறுத்து எடுத்த திருடனுக்கு சமம் என்று துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்த நாட்டில் ஒரு வர்த்தக கொள்ளை செயல்படுவதை நாங்கள் அவதானித்தோம் . இந்நாட்டின் வரலாற்றில் நாம் பார்த்த ஒன்று தான் பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தின் போது குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் மிகவும் ஆதரவற்றவர்களாக ஆனார்கள்.
ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படும் போது குறிப்பாக கொழும்பு போன்ற பிரதேசங்களில் குண்டு வெடிப்பு நிகழும் போது மக்கள் அதிக அச்சத்திற்கு உள்ளகின்றார்கள்.மற்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அது போன்று தான் சுனாமி ஏற்பட்ட சந்தர்ப்பமும். ஒரு அரசாங்கமாக நாம் சுனாமி பேரழிவை எப்படி பொறுப்புடன் எதிற்கொண்டோமோ அதே போல் இந்த நேரத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது போன்ற சூழ்நிலையில், யாராவது தங்கள் வியாபாரத்தில் ஏதாவது ஒரு வகையில் லாபம் சம்பாதிக்க முயன்றால், அது மிகவும் தவறு என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
சுனாமி பேரழிவின் போது செய்தி ஊடகங்களில் நாம் பார்த்த விடயம் ஒரு விடயம் சுனாமியினால் அடித்து செல்லப்பட குழந்தையின் சங்கிலியை பறித்த திருடனை பற்றி.
சுனாமியால் அடித்து செல்லப்படுகின்ற குழந்தையிடம் ஏதாவது இருந்தால், அதை பறித்து இலாபம் பெறலாம் என்பது அந்த காலங்களில் நங்கள் கேள்விப்பட்ட ஒரு விடயம் ஆகும்.
அதை போலத்தான் இந்த காலத்தில் வியாபாரிகள் செயற்படுகின்றனர். வியாபாரிகள் பொருட்களை மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் ஊடக அதிக இலாபம் சம்பாதிக்க காத்திருந்தால் அது மிகவும் தவறு என்பதை நாம் தெளிவாக கூறிகொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.