ஓட்டமாவடியில் கொரோனா தடுப்பூசி குறித்த விபரங்கள்

நாடளாவிய ரீதியில் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரனின் வழிகாட்டலில் மாவட்டத்தில் உள்ள பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வெள்ளிக்கிழமை 2021.09.10ம் திகதி வரை 12992 நபர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், 10762 நபர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 23754 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *