நோயாளி ஒருவருக்கு ஒக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லும் போது பிரிதோருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வைத்தியசாலையின் பராமரிப்பாளர் வாக்குவாதம் ஏற்பட்ட நபரை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கொடமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இத்தகைய கத்தி குத்திற்கு இலக்காகியுள்ளார்.
மேலும் பழங்கள் வெட்டும் கத்தியினாலேயே இந்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியசாலை பராமரிப்பாளர் கடும் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டு ரூ .200,000 பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு மேல் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.