யாழ். இந்தியத்துணைத் தூதரகத்தில், இந்தியாவின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது நினைவு தினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக, யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தூதரகம் மற்றும் இந்தியா மாளிகையில் மகாகவிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அத்துடன், சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சுரேன் ராகவன், எம்.எ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.சிறீதரன், சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சடை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வா வி.மணிவண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் திரு. எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ் பிரிவு பேராசிரிய எஸ். சிவலிங்கராஜா, போன்றோரும் காணொலி மற்றும் செவ்வி செய்திகள் மூலம் மகாகவிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்.
இதேவேளை,பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டத்தோடு, இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.