பண்டாரவளை பொலிஸாரினால் நுரைச்சோலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லொறிகளில் சீல் பன்னப்பட்ட நிலையில் 540 உரம் மூடைகளுடன் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரம் மூடைகள் அதிகவிலைக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு செல்ல இருந்ததாக சந்தேகத்தின்பேரில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பூலாச்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் 2 லொறிகள் கைப்பற்றப்பட்ட உரம் மூடைகள் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேட்கொள்ளப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
