கொழும்பில் தீ விபத்து: 21 வீடுகள் எரிந்து சேதம்

கொழும்பு, மார்ச் 25

கொழும்பு – தொட்டலங்க – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்றிரவு 12.30 அளவில் தீ பரவியதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் பாரவூர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *