கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு புத்தளம் ஆயுர்வேத வைத்திய சாலையின் வைத்தியர்களினால் மூலிகை அடங்கிய மருந்து வகைகள் கொடுக்கப்படன.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று கொரோனா நோய் பரவாமலிருக்க வீட்டின் வெளியிலிருந்து கதிரைகளை வைக்குமாறு கூறி மூலிகை அடங்கிய மருந்து வகைகளை வைத்தியர்கள் கதிரைகளில் வைத்துச் சென்றனர்.
புத்தளம் சுகாதார பிரிவிற்குட்பட்ட தில்லையடி, அல்ஜித்தாஹ், பாலாவி குட்செட், நிந்தனி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கான மூலிகையடங்கிய மருந்துவகைகள் வைத்தியர்களினால் வழங்கப்பட்டன.








