தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிரிபத்கொட கோணவல மற்றும் கடுவெலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது 261 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 28,44 மற்றும் 55 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.