தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் நடாத்தும் சூழல் பொது அறிவுப்பரீட்சை

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் பசுமை அமைதி விருதுகள் எனும் கருப்பொருளில் சூழல் பொது அறிவுப் பரீட்சை இடம்பெறுகின்றது.

இது மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி, சூழற் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பொருட்டுச் சூழல் பொது அறிவுப்பரீட்சை இணையவழியில் நடாத்தப்படவுள்ளது.

இதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவரகளுக்கு முறையே சூழலியல் ஆசான் க.சி.குகதாசன் ஞாபகார்த்த தங்க ,வெள்ளி, வெண்கலப்பதங்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ் பரீட்சைக்கு 27.09.2021 வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சை 03.10.2021 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெறவும் பதிவுகளை மேற்கொள்ளவும் WWW.tamilnationalgreen.Org எனும் இணையத்தளத்தினுாடாக அணுகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *