முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்றிரவு வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சட்டவிரோதமாக வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கடற்படையினர் கைது செய்ததுடன் அவரை முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்டவரிடம் இருந்த வெடிபெருளையும் முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர் என தெரிவிக்கப்டுகின்றது.
இதேவேளை நீதிமன்றத்திற்கு ஒப்படைப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட வெடிபொருளே இவ்வாறு வெடித்துச்சிதறி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக முல்லைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.