முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி முக்குத் தொடுவாய் முகத்துவாரம் கடற்பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (10) மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக முந்தல் பொலிஸாருக்கு அப்பகுதியிலுள்ள மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும், குற்றவியல் பொலிஸ் அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்தோடு இவ்வாறு கரையொதுங்கிய 50 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் உடைகளின்றி காணப்பட்டதுடன், சடலத்தில் சில பகுதிகளில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது