
நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவித்த பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தமிழர்களும் எம்முடன் இணையலாம் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. அவர்கள் ஆயுதம்மூலம் அடைய முடியாமல்போனதை டொலர்மூலம் பெற முற்படுகின்றனர்.
ஆனால் நாம் இந்த அரசியலையே எதிர்க்கின்றோம். மாறாக தமிழ் மக்களை எதிர்க்கவில்லை. தமிழர்களும் எமது பயணத்தில் இணையலாம்.
மேலும் மீண்டும் இந்நாட்டில் குடும்ப ஆட்சி ஏற்பட இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.