
online பரீட்சை காரணமாக 13, 17 ஆம் திகதிகளில் மின் திருத்த வேலை இடம்பெறாது!

நாளை 13 மற்றும் 17 ஆம் திகதிகளில் கல்முனை பிராந்தியத்தில் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மின்பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலைகாரணமாக குறித்த திகதிகளில் மின்துண்டிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழகத்தால் online மூலம் குறித்த தினங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதால் குறித்த பரீட்சைக்கு பொறுப்பான நிருவாகத்தால் இலங்கை மின்வார சபையின் கல்முனை காரியாலயத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து குறித்த திகதிகளில் மின்சசார திருத்த வேலைகள் வேறு தினங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என அலுவக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திறந்த பல்கலைக்கழகத்தால் கடந்த 02.09.2021 அன்று ஆரம்பமாகிய பரீட்சை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.