தற்போதைய கொரோனா பேரலையை அடக்கும் வரை இன்னும் சில நாட்களுக்கு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்றும், மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளை சாப்பிட வேண்டிய நிலமை வரும் என்றும் ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி அமைச்சர் ஜெகத் குமார கூறினார்.
“நாட்டில் இன்று ஏராளமான மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நாங்கள் அதைப் நினைத்து மிகவும் கவலை அடைகின்றோம்.எங்களுக்கு தெரியும் இந்த 2,000 ரூபாயில் யாரும் வாழ முடியாது.அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தாக இரண்டாயிரம் ரூபா அல்ல இருபதாயிரம் ரூபாய் கூட தந்து உதவும் ஆனால் அதற்கான நிலைமை தற்போது அரசாங்கத்திற்கு இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே நாம் அனைவரும் தியாகம் செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் மாதச் சம்பளத்தையும் கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்கினோம். நாங்களும் தானம் செய்தோம். இந்த நேரத்தில் எல்லோரும் மூன்று வேளை சாப்பிடாமல் ஒருவேளையை மீதப்படுத்தி இன்னும் சில நாட்கள் உயிர் வாழலாம்.
அப்படி வாழும் போது இந்த அலையை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்தால், இன்று மூன்று வேளை சாப்பிடாமல், ஒரு வேளையை மீதபடுத்தி நீங்கள் செய்யும் தியாகங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு காரணமாக இருக்கும். எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஒரு நாட்டின் வருமானம் இழக்கப்படும் போது, மக்களுக்காக அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது. எனவே, இந்த நிலைமைக்காக நாங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். இந்த நிலையில் மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் நம்மால் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த அர்ப்பணிப்புடனும் தியாகங்களுடனும் நாம் அனைவரும் முன்னேறி செல்ல முடியும் என்று நம்புகிறோம் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இதனை தெரிவித்தார்.