சுனாமி வருவதாக எண்ணி ஊரை விட்டு ஓடிய மக்கள்; நடந்தது என்ன?

சுனாமி வரப்போகிறது என்ற வதந்தியை நம்பி அங்குலான கடற்கரை பகுதியில் வாழும் மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் ஊரை விட்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்று கடல் சீற்றமாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தவறாக புரிந்து கொண்ட மக்கள் அச்சமடைந்து பதற்றதிற்கு உள்ளானதாக அங்குலான மீன்வள சங்கத்தின் செயலாளர் சனத் நந்தசிரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இது குறித்து அங்குலான பொலிலீசாரிடம் விசாரித்தபோது, ​​ சுனாமி வரப்போகிறது என்ற வதந்தியால் அங்குலான மற்றும் இரத்மலானை கடற்கரையோரத்தில் வாழும் மக்கள் பதற்றம் அடைந்து தனது பொருட்களுடன் ஊரை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இதன் பின்னர் காவல்துறை பொதுமக்களிடம் இது தொடர்பான உண்மை நிலையை அறிவித்து மக்களை சீரான நிலமைக்கு கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *