பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, Pas-de-Calais  கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது படகு Dunkerque  இல் இருந்து புறப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மீட்க்கப்பட்டனர்.

அதேபோல இரண்டாவது படகில் 43 பேரும் மூன்றாவது படகில் 40 பேரும் என மொத்தமாக 126 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பா து கலேயில் இருந்து இவ்வருடத்தில் மாத்திரம் 16 ஆயிரம் பேர் பிரித்தானியா நோக்கி படகில் பயணித்துள்ளனர் என பிராந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *