மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னக்குடா கடலில் 5 நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய ரமீஸ் சஜாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த நபர் அவரது ஐந்து நண்பர்களுடன் நேற்று மாலை புன்னைக்குடா கடலில் நீராடச் சென்று நீராடியபோது குறித்த நபர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
எனினும் இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படடுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.