இஞ்சி கொடுத்து மிளகு வாங்கி விட்டோம்! புலம்புகிறார் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!

ஒரு வளமான நாட்டினை உருவாக்கும் நோக்கில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்த மையானது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதை போல் ஆகும் என ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக இருந்த முருத்தெட்டுவே தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதியே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டை வளப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் அதிகளவான திட்டங்களை கொண்டு வந்த போதும் அதில் மக்கள் எந்த வித சந்தோஷத்தையும் காணவில்லை. இது தெய்வத்தின் கோபமா அல்லது தெய்வத்தின் சாபமா என்று சிலர் நம்மிடம் வந்து கேட்கும் அளவிற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன இன்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் மக்கள் அனைவரும் அதனை பெரும் பண்டிகையாக கொண்டாடினார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு மக்களினதும் மனதில், மரண இறுதிச் சடங்கின்போது காணப்படும் மனநிலையே காணப்படுகின்றது.

மேலும் ஒரு பகுதியினர் தனது பதவியை ராஜினாமா செய்கின்றனர் ஒரு பகுதியினர் எல்லாவற்றில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றனர். மத்திய வங்கி ஆளுநர் உட்பட இராணுவத்தினர் அரச சேவையாளர்கள், மக்கள் முதலான அனைவரும் அரசாங்கத்தின் மீது விரக்தியில் உள்ளனர். இன்று நாம் மேலே பார்த்து துப்பிக் கொள்ளும் நிலையிலேயே உள்ளோம் என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு இப்படியான ஒரு சூழ்நிலை ஏற்படும் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பிரகாசமான ஒரு சிறப்பான தலைவரை நியமித்து விட்டோம் என நாம் அன்று நினைத்தோம் ஆனால் இப்பொழுது தான் புரிகிறது அது மிகப் பெரும் தவறு என்று. நாம் அன்று கூறினோம் இந்த நாட்டை சீனா காலனித்துவத்திற்கு உட்படுத்த கூடாது என்று ஆனால் அதனை அரசாங்கம் பொருட்படுத்தாமல் துண்டு துண்டாக கூறு போட்டு தனது நாட்டினை சீனாவிற்கு விற்கின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால் எமது நாட்டிற்கு என்ன ஆகும் என்பதை மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதை போல் நமது நிலைமையானது காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே முருத்தெட்டுவே தேரர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *