
நாடளாவிய ரீதியில், மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், பழைய பொருட்கள் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளன.
பழைய சிமினி விளக்கு, சிரட்டைக் கரியால் பயன்படுத்தப்படும் ஐயன்பொக்ஸ் ஆகியனவே சந்தைக்கு வந்துள்ளன.
அதன்படி சிமிலி விளக்கொன்று 1,500 ரூபாய்க்கும், பழைய ஸ்திரி பெட்டி 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்விரண்டு பொருட்களுக்குமான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஹட்டன் வர்த்தகர்கள், விரைவாக விற்றுத் தீர்க்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.
முழு உலகமும் தொழிற்நுட்ப ரீதியில் முன்னோக்கி நகரந்துகொண்டிருக்கும் நிலையில், இலங்கை, சுமார் 50 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.