கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீஸில் போராட்டம்

கிரீஸ் அரசின் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்துள்ளது.

கிரீஸ் அரசின் கட்டாய தடுப்பூசி உத்தரவை கடைப்பிடிக்காத சுமார் 6 ஆயிரம் சுகாதார முன்களப்பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Thessaloniki நகரத்தில், கிரீஸ் பிரதமர் Kyriakos Mitsotakis கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த வளாகத்தை நோக்கி சென்ற சுமார் 2 ஆயிரத்து 500 போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அத்தோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் புகை வீசியும் அங்கிருந்து வெளியேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *