
30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 10 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தவறியவர்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.