பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் விளையாடி சதமடித்தார்.

இதனையடுத்து 314 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.2 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்று 88 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *