கொவிட்-19 தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு

கொழும்பு, மார்ச் 30

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 4 பேர் நேற்று கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 473 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *