யாழ்.பாவனையாளர் அதிகார சபையின் விசேட கலந்துரையாடல்

பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுவது குறித்தும் அவர்களுடைய குறைகளை அறிந்து கொள்வது குறித்தும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் போன்றவை இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய அமைச்சுடன் கலந்துரையாடி அதனை நீக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை புறநகர், கிராமமென மாவட்டம் முழுவதும் முன்னெடுப்பதற்கும் இதன்போது கோரப்பட்டது.

பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் அண்மைய சுற்றிவளைப்புக்களில் அதிக விலைக்கு
விற்பனைக்கு செய்தமை தொடர்பாக 80ற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *