ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.
அதன்படி, ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறும்.
மேலும், அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது.
முதல் நாளான செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.