
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்களினால் தாக்கப்பட்டு செருப்படி வாங்கியுள்ளனர்.
யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது தேசிய கொடியுடன் வந்த மூவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டனர்.
அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டார்.
குறித்த மூவரில் ஒருவர் தற்போது யாழில் வசித்து வரும் நிலையில் மற்றைய இருவரும் பிலியந்தல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தினை வடக்கில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்த போது , நேற்றைய தினம் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய மூவரும் யாழ்.நகர் பகுதியில் தேசிய கொடிகளுடன் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.