நாட்டில் அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கும் வகையில் இலங்கையில் பொது அவசரகாலநிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார்.
நேற்று(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

