ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது -அமெரிக்க தூதுவர்

இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார் .

மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் போராட்டம் நடத்தினர்  இது தொடர்ப்பில் கருத்து தெரிவிக்கையிலே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் அவர் தெரிவிக்கையில் இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது,  நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன், எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன் என்றார் .

இதேவேளை துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மைiயும் நிவாரணத்தையும் கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *