
இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது டுவிட்டர் பதிவில்,
இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன்.
எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன்-என்றார்.