
ஜெனீவா, ஏப் 02
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றோம் என ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அனைத்து குழுக்களும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை மன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது.